ஹராமா? தேச துரோகமா? விஸ்வரூபம் 2 - சர்ச்சை 1
நேற்று வெளியிடப்பட்ட விஸ்வரூபம் 2 டிரைலரில் இடம்பெற்ற ஒரு வசனம் விவாதங்களை எழுப்பியுள்ளது.;
நேற்று வெளியிடப்பட்ட விஸ்வரூபம் 2 டிரைலரில் இடம்பெற்ற ஒரு வசனம் விவாதங்களை எழுப்பியுள்ளது.
தமிழில் “எந்த மதத்தையும் சார்ந்து இருக்கிறது தப்பில்லை, ஆனால் தேச துரோகியா இருக்கிறது தப்பு” என்று வரும் வசனம், இதே படத்தின் ஹிந்தி டிரைலரில் வேறு விதமாக இடம்பெறுகிறது.
“முஸ்லிமாக இருப்பது தவறில்லை, ஆனால் உன்னைப் போன்ற மனிதனாக இருப்பது ஹராம்” என்பதே ஹிந்தி டிரைலரில் இடம்பெறும் வசனம். ஹராம் என்பது இஸ்லாமிய மதத்தில் தடை செய்யப்பட்ட விஷயங்களை குறிக்கும்.
ஹிந்தி மற்றும் தமிழில் வெளியான ஒரே படத்தின் டிரைலரில் இடம்பெற்றுள்ள இந்த மாறுபட்ட வார்த்தைகள் காரணத்தை தேட வைத்துள்ளது.