விளையாட்டு திருவிழா (10.12.2018) - அடிலெய்ட் டெஸ்டில் ஆட்டம் கண்ட ஆஸி
பதிவு : டிசம்பர் 10, 2018, 09:43 PM
விளையாட்டு திருவிழா (10.12.2018) - வரலாற்று சாதனை படைத்த இந்தியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது. அடிலெய்டில் கடந்த 6ஆம் தொடங்கிய இந்தப் போட்டியில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 250 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 235 ரன்களும் எடுத்தது. 15 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்சில் 307 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. 

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் சீரான இடைவேளியில் தங்களது விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ஆனால், ஆஸ்திரேலிய அணியின் பின்வரிசை வீரர்கள் கடுமையாக போராடி இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. ஆஸ்திரேலிய அணியின் கம்மின்ஸ், லயான் ஆகியோர் இந்திய வீரர்களுக்கு தலை வலித் தர , ஒரு வழியாக ஆஸ்திரேலிய அணி 291 ரன்கள் எடுத்திருந்த போது அனைத்து விக்கெட்டுகளையும் அந்த அணி இழந்தது.

இதன் மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1ககு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் சதம் விளாசிய புஜாரா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் பும்ரா, அஸ்வின் ஆகியோர் தலா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதல் டெஸ்டில் வெற்றி வாகை சூடிய இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

வரலாற்று சாதனை படைத்த இந்தியா

ஆஸ்திரேலியவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸதிரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் போட்டியை வென்றுள்ளது. ஒரு போட்டியில் 11 கேட்சளை பிடித்து பண்ட், ஏற்கனவே இருந்த உலக சாதனையை சமன் செய்துள்ளார். 2014 ஆம் ஆண்டு அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு அருகில் வந்து கோட்டைவிட்டது. அந்தப் போட்டியில் இரு இன்னிங்சிலும் சதம் விளாசிய கோலி, இம்முறை வெற்றியை அறுவடை செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் டெஸ்ட் போட்டியை வென்ற ஒரே ஆசிய கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 71 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைகள் ஒரு பக்கம் இருக்க, எளிதில் வெல்ல வேண்டிய போட்டியை இந்தியா போராடியே வென்றது. இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அவர் 52 புள்ளி 5 ஓவர்களை வீச வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரது பந்துவீச்சு அபாயகரமாக நிலையில் இல்லை என்பது சற்று கவனிக்க வேண்டியவை.

இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் செய்ய வேண்டியதை அஸ்வின் ஒருவரே செவய்துள்ளார். இதனால், இந்தப் போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு பதில் ஜடேஜா அல்லது விஹாரியை இந்தியா சேர்த்து இருந்தால், நிச்சயம் இந்தப் போட்டியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இருக்கும். கேப்டனாக போட்டியில் இந்தியா வென்று இருந்தாலும், சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்வதில் விராட் கோலி தொடர்ந்து தவறுகளை இழைத்து வருகிறார். FIELDINGல் ஆட்களை நிறுத்துவதிலும் கோலி சிறப்பாக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. வெற்றி பெற்றுவிட்டதால் செய்த தவறை கவனிக்காமல் விட்டால், அந்த வெற்றி நிலைக்காது என்பதால், இத்னை இந்தியா சரி செய்து தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ஃபார்முலா ஓன் கார் எப்படி இருக்கும்?

உலகின் அதிவேக கார் பந்தயங்களில் ஒன்று பார்முலா  ஓன். மணிக்கு சுமார் 375 கிலோ மீட்டர் வேகத்தில் பார்முலா ஓன் கார்கள் செல்லக் கூடும். காரின் வெளிப்பகுதி ஆடம்பரமாக காட்சியளித்தாலும், காருக்கு உள்ளே சென்று பார்த்தால், இதில் அமர்ந்தா ஓட்டுனர்கள் காரை இயக்குகிறார்கள்? என்று எண்ணம் தோன்றும். சாதாரண காரில் ஓட்டுனர்கள் அமர்ந்திருப்பது போல், ஃபார்முலா ஓன் காரில் அமர முடியாது. கிட்டத்தட்ட ஓட்டுனர் படுக்கும் நிலையில் இருக்கை அமைக்கப்பட்டு இருக்கும். சிறிய அறை போன்ற இடத்தில் தான் வீரர்கள் பந்தயத்தை மேற்கொள்கிறார்கள் 

சாதாரண காரின் STEERING க்கும், பார்முலா ஓன் காரின் STERRING க்கும் சற்றும் தொடர்பு இருக்காது.. வீடியோ கேம்களில் வரும் JOYSTICKS போல் இருக்கும் இந்த STERRING ல் கிட்டதட்ட 22 பட்டன்கள் இருக்கும்.ACCELATOR, BRAKE,CLUTCH உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இந்த STEERING ல் தான் இருக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?

காரின் வேகத்தை எப்போது அதிகரிக்க வேண்டும், அணி நிர்வாகிகளுடன் பேச ரேடியோ வசதி உள்ளிட்ட வசதிகளும் இந்த STEERING லே இருக்கும். Formula one என்பது டென்னிஸ் போல் தனி நபர் விளையாட்டு அல்ல.. ஒவ்வொரு அணியிலும் சுமார் 30 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுனர்கள் பந்தயத்தின் போது வீரருக்கு உறுதுணையாக இருப்பார்கள்

பந்தயத்தின் போது காரின் டயரை மாற்ற மட்டும் 22 பேர் கொண்ட குழு இயங்கும்.  காரின் டயரை அவர்கள் மாற்ற எடுத்துக் கொள்ளும் நேரம் அதிகபட்சமாக 8 விநாடிகள் மட்டும் தான். PITSTOP எனப்படும் அந்த பகுதியில் மார்க் செய்யப்பட்ட இடத்தில் வீரர்கள் காரை சரியாக நிறத்தினால் மட்டுமே, இந்த பணி சாத்தியமாகும். இல்லையேனில் பெரும் சிரமம் ஏற்படும். இதனாலே காரை சரியாக நிறுத்துவதற்காக வீரர்கள் தனி பயிற்சியை மேற்கொள்வார்கள்.

தொடர்புடைய நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா - 13.11.2018 - தோனி இடத்தை பிடிப்பாரா ரிஷப் பண்ட்?

விளையாட்டு திருவிழா - 13.11.2018 - ரிஷப் பண்ட்க்கு காத்திருக்கும் சவால்கள்

243 views

பிற நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி

விளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்

98 views

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி?

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை

70 views

விளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்

விளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்

41 views

விளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி?

விளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி

43 views

விளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்

விளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்

29 views

விளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை

விளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.