அமெரிக்க அதிபர் தேர்தல் : டிரம்ப் - ஜோ பிடன் நேருக்கு நேர் விவாதம் (தமிழில்)

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் தடுப்பு குறித்து அதிபர் ​வேட்பாளர்கள் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே காரசார கருத்து மோதல் ஏற்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தல் : டிரம்ப் - ஜோ பிடன் நேருக்கு நேர் விவாதம் (தமிழில்)
x
கொரோனா ஊரடங்கால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற அதிபர் டிரம்ப், இதற்கு முன் நாம் இதை எதிர்கொண்டதில்லை என்றார். 
இது உண்மைக்கு புறம்பானது என்ற அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், தளர்வுகளை வழங்கும் அரசு, வைரஸ் பரவலை தடுக்க வழிமுறைகளை வகுக்கவில்லை என சாடினார். ஊரடங்கு காரணமாக அமெரிக்க நகரங்கள், பேய் நகரங்கள் போல் மாறி உள்ளதாக டிரம்ப் கூறியதற்கு, அவர் ஏன் முகக் கவசம் அணிவதில்லை என ஜோ பைடன் வினவினார். 

இதற்கு, ஊரடங்கு காரணமாக நாடே சிறை போல் மாறிவிட்டதாக முற்றுப்புள்ளி வைத்த டிரம்ப், வயதானவர்கள், இணைநோய் உள்ளவர்களை காப்பாற்றுவதே அரசின் நோக்கம் என பதிலளித்தார். கொரோனா எப்படிப்பட்டது என யாருக்கும் தெரியாது என்றும், தற்போதுதான் கற்றுக்கொண்டு இருக்கிறோம் என்றும் டிரம்ப் கூறினார். இதற்கு, ஜனவரி மாதமே கொரோனா பற்றி தெரிந்தும், ஏன் சொல்லவில்லை என கேள்வி எழுப்பிய ஜோ பிடன், கொரோனா பெரிய பிரச்சினையே இல்லை என டிரம்ப் ஆதரவாளர்கள் கூறியதாக குற்றம்சாட்டினார். 

அமெரிக்காவில் இறப்பு விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறிய டிரம்ப், பல மாகாணங்களில் தொற்று குறைந்து வருவதாகவும், தடுப்பூசியை கொண்டு வர அனைத்து முயற்சிகளும் எடுத்துவருவதாகவும், தெரிவித்தார். கொரோனாவால் மக்கள் உயிரிழப்பதற்கு பொறுப்பேற்க மாட்டேன் என அதிபர் டிரம்ப் கூறுவது சரியா என வினவிய ஜோ பிடன், நாளொன்றுக்கு ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்து வருவதாகவும், இயல்புநிலை திரும்ப தேவையான தேசிய கொள்கையை அரசு வகுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். 

இதற்கு, 2020 இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி வருவதற்கு வாய்ப்பு உள்ளது என பதிலளித்த டிரம்ப், சில நிறுவனங்களின் தடுப்பூசி சோதனையில், நல்ல முன்னேற்றம் உள்ளது என்றார். இதை மறுத்த ஜோ பிடன், இவர்களிடம் எந்த திட்டமும் இல்லை என்றும், அதனால்தான் கொரோனா பரவுவதாகவும் பகிரங்க குற்றம்சாட்டினார். அரசின் தடுப்பு நடவடிக்கை மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என்ற டிரம்ப், பன்றிக்காய்ச்சல் வந்த போது ஜோ பிடன் என்ன செய்தார் என காட்டமாக கேள்வி எழுப்பினார். 


Next Story

மேலும் செய்திகள்