தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு கோலாகலம் - ராஜகோபுரம் மீது புனிதநீர் ஊற்றி சிறப்பு பூஜை

தஞ்சாவூர் பெரிய கோயிலில் தமிழ் மந்திரங்கள் முழங்க, குடமுழுக்கு விழா, கோலாகலமாக நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு கோலாகலம் - ராஜகோபுரம் மீது புனிதநீர் ஊற்றி சிறப்பு பூஜை
x
23 ஆண்டுகளுக்குப் பின், இன்று தஞ்சை பெரிய கோயில் குட முழுக்கு விழா சிறப்பாக நடந்தது. குடமுழுக்கு விழாவில், தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளில் மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டன. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, புனிதநீர் ராஜகோபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு மேளதாளம்,  வேதமந்திரங்கள் முழங்க ராஜகோபுரத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் அனைத்து கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்