"சுக்குநூறாக உடைந்த புதன் கிரகம்... பூமிக்குள் நுழைந்த துகள்கள்" - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

புதன் கிரகத்தின் துகள்கள் பூமியில் மறைந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
x
புதன் கிரகத்தின் துகள்கள் பூமியில் மறைந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.... சூரியனுக்கு மிக அருகில், இருக்கும் மிகச் சிறிய கிரகம் தான் மெர்க்குரி என்று அழைக்கப்படும் புதன்...இந்த கிரகம் தொடர்பாக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி வரும் நிலையில், தற்போது புதிய ஆய்வு முடிவுகள் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது சிறிய கிரகமாக உள்ள புதன், பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய கிரகமாக இருந்ததாகவும்,மிகப்பெரிய சக்தி ஒன்றன் மீது மோதியதில், அந்த கிரகம் சுக்குநூறாக உடைந்திருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக புதன் கிரகத்தின் ஏராளமான துகள்கள் பூமியிலும் இருக்கலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பூமியில் சுமார் 70,000 விண்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில்,இவை பெரும்பாலும் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களை சேர்ந்தவை என கூறப்படுகிறது.ஆவணப்படுத்தப்பட்ட விண்கற்களில் சில மட்டும் புதன் அல்லது வீனஸ் கிரகத்தில் இருந்து விழுந்திருக்கலாம் என கணிக்கும் விஞ்ஞானிகள், இதுபோன்ற விண்கற்கள் முதன்முறையாக 1836ஆம் ஆண்டு பிரான்ஸின் ஒரு கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுபோன்று பூமியில் 80 விண்கற்கள் இருப்பதாகவும், இவை புதன் கிரகத்தோடு ஒத்துப்போக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதனை ஆய்வு செய்தால் புதன் கிரகத்தை பற்றி பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்