அபுதாபி மீது மீண்டும் ஏவுகணை தாக்குல்

அபுதாபி மீது ஏவப்பட்ட 2 ஏவுகணை தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
x
அபுதாபி மீது ஏவப்பட்ட 2 ஏவுகணை தாக்குதல் முறியடிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரமாக விளங்கும் அபுதாபி மீது, ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், அதை அமீரகத்தின் பாதுகாப்பு படையினர் வானிலேயே சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அமீரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் அபுதாபியில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்