இலங்கைக்கு ரூ.3,730 கோடி கடனுதவி வழங்கும் இந்தியா

இலங்கைக்கு 3 ஆயிரத்து 730 கோடி ரூபாய் கடனுதவி வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
x
இலங்கைக்கு 3 ஆயிரத்து 730 கோடி ரூபாய் கடனுதவி வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இலங்கையில் அந்நிய செலாவணிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்குக் கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிடம் இருந்து இலங்கை 7 ஆயிரத்து 391 கோடி ரூபாய் கடனுதவி கோரிய நிலையில், பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதற்காக இலங்கைக்கு இந்தியா 3 ஆயிரத்து 730 கோடி ரூபாய் கடனுதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இலங்கை நிதியமைச்சர் பஷில் ராஜபக்சே இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்