சிலி மக்களுக்கு 4வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

தென் அமெரிக்க நாடான சிலியில் 4வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது
சிலி மக்களுக்கு 4வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
x
தென் அமெரிக்க நாடான சிலியில் 4வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் சிலி அரசாங்கம் தொடர்ந்து மும்முரம் காட்டி வருகிறது. சுமார் 2 கோடி மக்கள்தொகை கொண்ட அந்நாட்டில், சுமார் 1 கோடி பேர், இதுவரை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். தற்போது அங்கு தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், 12 வயது முதல் 55 வயது வரையிலான நபர்களுக்கு 4வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பமாகி உள்ளது. இதன்மூலம், இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக 4வது டோஸ் செலுத்திவரும் நாடாக சிலி மாறி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்