"ஆண் துணையின்றி பெண்கள் பயணிக்க தடை" - ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிரடி

ஆப்கானிஸ்தானில் ஆண் துணை இல்லாமல் பெண்கள் பயணிக்க தடை விதித்து தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
x
ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்து வரும் தலிபான்கள், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதன்படி, தற்போது பயணம் செய்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து தலிபான்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் 72 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது. பயணம் செய்யும் பெண்கள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும் என்றும், அதனை அணியாத பெண்களை, ஓட்டுநர்கள் வாகனங்களில் அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளனர். பயணம் செய்யும் அனைவரும் வாகனங்களில் பாடல்கள் கேட்கக்கூடாது என்றும் தலிபான்கள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்