கிறிஸ்துமஸ் தாத்தா உடையில் வந்த யானைகள் - உற்சாகத்தில் துள்ளி குதித்த குழந்தைகள்

தாய்லாந்தில் கிறிஸ்துமஸ் தாத்தா உடையில் வந்த யானைகள், பள்ளி குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுவாரஸ்ய தொகுப்பை காணலாம்.
கிறிஸ்துமஸ் தாத்தா உடையில் வந்த யானைகள் - உற்சாகத்தில் துள்ளி குதித்த குழந்தைகள்
x
தாய்லாந்தில் கிறிஸ்துமஸ் தாத்தா உடையில் வந்த யானைகள், பள்ளி குழந்தைகளுடன்  கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுவாரஸ்ய தொகுப்பை காணலாம். வழக்கமாக கிறிஸ்துமஸ் தாத்தா கலைமான்கள் பூட்டிய தேரில் பறந்து வந்து குழந்தைகளுக்கு பரிசு வழங்குவார் என கதைகள் கேட்டிருப்போம்.

ஆனால் தாய்லாந்தில் பள்ளியொன்றுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த பாகன்கள் யானைகளில் வந்தது, குழந்தைகளை குதூகலப்படுத்தியது.

முகக்கவசம் அணிந்து கிறிஸ்துமஸ் தாத்தா போன்று உடையணிந்து வந்த யானைகள், குழந்தைகளுக்கு முகக்கவசம், சானிடைசர்,  பலூன், சாக்லைட்கள் மற்றும் கிப்ட் கார்டுகளை வழங்கின.

இதனை பெற்றுக்கொண்ட சிறுவர்கள் ஆரவாரம் செய்தனர். யானைகள், குழந்தைகள் நடனத்துடன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் களை கட்டியது.

ஆன்-லைன் வகுப்புகள் முடிந்து இப்போதுதான் மாணவர்கள் பள்ளிக்கு வரத் தொடங்கியுள்ளனர். இத்தனை நாள் இடைவெளியால் அவர்கள் மிகவும் மன அழுத்தத்திலும் உள்ளனர். அவர்களை மகிழ்ச்சியில் துள்ள வைக்கவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக சொல்கிறார்கள் விழா ஏற்பாட்டாளர்கள்.


Next Story

மேலும் செய்திகள்