இந்தோனேசியாவில் அன்னையர் தினக் கொண்டாட்டம்

இந்தோனேசியாவில் அன்னையர் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் தங்கள் தாயின் பாதங்களைக் கழுவி நன்றிக்கடன் செலுத்தினர்.
இந்தோனேசியாவில் அன்னையர் தினக் கொண்டாட்டம்
x
இந்தோனேசியாவில் அன்னையர் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் தங்கள் தாயின் பாதங்களைக் கழுவி நன்றிக்கடன் செலுத்தினர். இந்தோனேசியாவில் டிசம்பர் மாதத்தில் அன்னையர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், ஜகார்த்தா பகுதியில் அன்னையர் தினத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். பெற்ற தாயின் பாதங்களைக் கழுவுவது என்பது அங்கு பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு அன்னையர் தினத்தை முன்னிட்டு, குழந்தைகள் தாய்க்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக தாயின் பாதங்களைக் கழுவி சுத்தம் செய்தனர். பூரிப்படைந்த தாய்மார்கள், பிள்ளைகளை ஆனந்தக் கண்ணீருடன் கட்டி அணைத்துக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்