முழுமையாக வளர்ந்த நிலையில் டைனோசர் முட்டைக்கரு - சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சீனாவில் கண்டெடுக்கப்பட்ட டைனோசர் முட்டையின் கரு, முழுமையாக வளர்ந்த நிலையில் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
முழுமையாக வளர்ந்த நிலையில் டைனோசர் முட்டைக்கரு - சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
x
சீனாவில் கண்டெடுக்கப்பட்ட டைனோசர் முட்டையின் கரு, முழுமையாக வளர்ந்த நிலையில் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

தெற்கு சீனாவில் உள்ள கான்சூவில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைக்கரு சுமார் ஆறரை கோடி ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2000ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த முட்டை, 10 ஆண்டுகளாக அருங்காட்சியகத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டது. பிறகு அதிநவீன ஸ்கேனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் முட்டையை ஆய்வு செய்து பர்த்ததில் முட்டையில் உள்ள கருவானது, முழுமையாக வளர்ந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. அக்கரு தெரொபாட் சைனோசர் அல்லது ஓவிரப்டொரொசராக இருக்கலாம் என்று கருதப்படும் நிலையில், இந்த கருவுக்கு 'பேபி யிங்லியாங்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 10.6 இன்ச் நீளம் கொண்ட பேபி யில்லியாங் சீனாவில் உள்ள யிங்லியாங் ஸ்டோன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்