அமெரிக்காவில் ஒமிக்ரானுக்கு முதல் பலி

அமெரிக்காவில் ஒமிக்ரானுக்கு முதல் பலியாக 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
x
அமெரிக்காவில் ஒமிக்ரானுக்கு முதல் பலியாக 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உலகிலேயே ஒமிக்ரானுக்கு முதல் பலி இங்கிலாந்தில் பதிவான நிலையில், அங்கு தற்போது 12 பேர் ஒமிக்ரானுக்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர் ஒருவர் ஒமிக்ரான் தொற்றுக்கு உயிரிழந்துள்ளதாக 
தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ்களை எடுத்து கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்