அழியாத முத்திரையை பதித்தவர் பிபின் ராவத் - அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் இரங்கல்

அழியாத முத்திரையை பதித்தவர் பிபின் ராவத் என்று அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் லாய்டு ஜெ அஸ்டின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
x
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ வீரர்களின் மறைவுக்கு அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் லாய்டு ஜெ அஸ்டின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிவிப்பில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார். மேலும் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு கூட்டு நடவடிக்கையில் அழியாத முத்திரையை பதித்ததாக தெரிவித்துள்ளார். இதேபோல் பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பே அளித்த பேட்டியில், பிபின் ராவ் உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்