ஒமிக்ரான் எவ்வளவு வேகத்தில் பரவும்? -புதிய தகவல்

டெல்டா வைரஸை காட்டிலும் ஒமிக்ரான் மூன்று மடங்கு மீண்டும் பரவும் திறன் கொண்டது என ஆய்வு மூலம் தென்னாப்பிரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
x
டெல்டா வைரஸை காட்டிலும் ஒமிக்ரான் மூன்று மடங்கு மீண்டும் பரவும் திறன் கொண்டது என ஆய்வு மூலம் தென்னாப்பிரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

12க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகி வரும் நிலையில் அதன் பரவும் தன்மை, தீவிரம் மற்றும் தடுப்பு மருந்துகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் முதலில் ஒமிக்ரான் வைரஸை உறுதி செய்த தென் ஆப்பிரிக்கா, ஆய்வில் மூலம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது இதற்கு முன்பு பாதிப்பை ஏற்படுத்திய பீட்டா, டெல்டா வைரஸ்களை காட்டிலும் 3 மடங்கு மீண்டும் பரவும் திறனை ஒமிக்ரான் வைரஸ் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதிலும் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளையும், ஒமிக்ரான் மாதிரிகளையும் ஒப்பிட்டு அதன் நோய் எதிர்ப்பு திறனை பரிசோதித்து பார்த்ததில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. 

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மூன்று மாதத்தில் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.  

கொரோனாவின் மூன்று அலைகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கே மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டும் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

எனினும் புதிய வகை வைரஸை தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தலாம் என்பதை நம்புவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தடுப்பூசி செலுத்தி கொள்வதால் கடுமையான பாதிப்பையும், உயிரிழப்பையும் தவிர்க்க முடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்