ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி - 5பில்லியன் கொரோனா தடுப்பூசி வழங்க தயார் : உலக தலைவர்களிடையே மோடி பேச்சு

ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அடுத்த ஆண்டில் 5 பில்லியன் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு வழங்க இந்தியா தயாராக உள்ளது என்றார்
ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி - 5பில்லியன் கொரோனா தடுப்பூசி வழங்க தயார் : உலக தலைவர்களிடையே மோடி பேச்சு
x
இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட 20 நாடுகளை கொண்ட ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இம்மனுவேல் மெக்ரான், கனட பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டோ உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து உச்சி மாநாட்டின் முதல் நாளில் பேசிய  மோடி, கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவின் நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். அடுத்த ஆண்டு உலக நாடுகளுக்கு 5 பில்லியன் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய இந்தியா தயாராக இருப்பதாக குறிப்பிட்ட அவர், உலக சுகாதார நிறுவனம் இந்திய தடுப்பூசிகளை அங்கீகரித்துள்ளதாகவும் கூறினார்.  முன்னதாக போப் பிரான்சிஸ்ஸை சந்தித்து பேசிய மோடி, இந்தியா வரும்படி அழைப்பு விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்