பிரதமர் மோடி-போப் பிரான்சிஸ் சந்திப்பு - காலநிலை, வறுமை ஒழிப்பு குறித்து பேச்சு

வாடிகன் நகரில் கத்தோலிக்கத் சபையின் தலைவர் போப் பிரான்சிசை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடி-போப் பிரான்சிஸ் சந்திப்பு - காலநிலை, வறுமை ஒழிப்பு குறித்து பேச்சு
x
வாடிகன் நகரில் கத்தோலிக்கத் சபையின் தலைவர் போப் பிரான்சிசை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, வாடிகன் நகருக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு போப் பிரான்சிஸை பிரதமர் மோடி சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் காலநிலை மாற்றம், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். மேலும், இந்தியா வருமாறு  போப் ஆண்டவருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்