ஐ.நாவின் பருவநிலை உச்சி மாநாடு - பேரிடர்களுக்கு இழப்பீடு கோரும் இந்தியா
பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, வளர்ந்த நாடுகள் இழப்பீடு அளிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
அக்டோபர் 31இல் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் ஐ.நாவின் 26ஆவது பருவநிலை உச்சி மாநாடு நடைபெற உள்ளது. புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றை தடுக்க, கடைசி கட்ட முயற்சிகளை உலக நாடுகள் இந்த மாநாட்டில் முன்னெடுக்க உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 120 உலக நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரிடர்களுக்கு இழப்பீடுகள் அளிப்பது பற்றியும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. சிக்கல்கள் மிகுந்த இந்த விசியம் பற்றி இதுவரை உலக நாடுகளிடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை.
பருவநிலை மாறுதல்களுக்கு வளர்ந்த நாடுகள் தான் அதிக அளவில் காரணமாக உள்ளதால், இதன் ஏற்படும் பேரிடர்களுக்கு, இந்நாடுகள் இழப்பீடு அளிக்க வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.
தற்போது உலக அளவில் பசுமை வாயுகள் வெளியேற்றத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சீனாவும், இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும் உள்ளன. ஆனால் கடந்த 200 ஆண்டுகளில் பசுமை வாயு வெளியேற்றத்தின் மொத்த அளவில் இந்தியாவின் பங்கு மிகக் குறைவாக உள்ளதால், இந்தியாவிற்கு நிகரமாக நஷ்ட ஈடு கிடைக்கும்.
அமெரிக்கா, சீனா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 2050ற்குள் பசுமை வாயு வெளியேற்றத்தை முற்றிலும் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளன. ஆனால் இந்தியா இதுவரை அப்படி ஒரு இலக்கை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story