நவம்பர் 8 முதல் அமெரிக்க செல்ல கட்டுப்பாடுகள் தளர்வு

நவம்பர் 8 முதல் அமெரிக்காவிற்கு செல்பவர்களுக்கான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
நவம்பர் 8 முதல் அமெரிக்க செல்ல கட்டுப்பாடுகள் தளர்வு
x
நவம்பர் 8 முதல் அமெரிக்காவிற்கு செல்பவர்களுக்கான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. 

அமெரிக்காவின் தினசரி கொரோனா தொற்றுதலின் சராசரி அளவு தற்போது 79 ஆயிரமாக உள்ளது.

நவம்பர் 8 முதல், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டினர் அனைவருக்கும் தடையின்றி அமெரிக்கா செல்ல அனுமதியளிக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றை, இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் இனி அமெரிக்காவிற்கு செல்ல முடியும், இந்த தடுப்பூசிகள் அமெரிக்க அரசின் நோய்க் கட்டுப்பாட்டு மையத்தினால் அங்கீகரிக்கப்படாதவையாக இருந்தாலும், அவர்களுக்கு அனுமதியளிக்கப்படும்.

உதாரணமாக அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு இன்னும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மையம் அங்கீகாரம் அளிக்கவில்லை. ஆனால் இனிமேல் இந்த தடுப்பூசி செலுத்தியவர்கள், அமெரிக்காவிற்கு செல்ல முடியும்

கொரோனா நோய் தொற்றியவர்கள், அதில் இருந்து மீண்ட பின், ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அவர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இணையாக அவர்கள் அங்கு கருதப்படுகின்றனர். 

ஆனால் இவர்களுக்கு அமெரிக்காவிற்கு செல்ல தடை விதிக்கப்பட உள்ளது.  இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே அமெரிக்காவில் அனுமதியளிக்கப்படுகிறது.

ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியை முதல் டோஸாகவும், வேறு ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியை இரண்டாவது டோஸாக எடுத்துக் கொண்டவர்களுக்கும், நவம்பர் 8 முதல் அமெரிக்கா செல்ல அனுமதியளிக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்