அமெரிக்காவில் பூஸ்டர் டோசுக்கு அனுமதி - உலக சுகாதார நிறுவனம் அதிருப்தி

அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
x
அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு வளர்ந்த நாடுகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தயாராகியுள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 65-வயதுக்கு மேற்பட்டோருக்கும், 18 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

தேரணி ராஜன்,முதல்வர், ராஜீவ்காந்தி மருத்துவமனை

பல்வேறு ஏழை நாடுகளில், பொதுமக்களுக்கு இன்னும் போதுமான தடுப்பூசியே கிடைக்காத நிலையில், வளர்ந்த நாடுகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த அவசரம் காட்டுவதற்கு ஏற்கெனவே உலக சுகாதார நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் அதிருப்திக்கு மத்தியில், அமெரிக்காவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேரணி ராஜன்,முதல்வர், ராஜீவ்காந்தி மருத்துவமனை

65 வயதானோர் 2வது டோஸ் செலுத்திக்கொண்ட 6 மாதங்களுக்கு பிறகு, பைசர் நிறுவனத்தின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்