ஆங்சான் சூகி மீதான ஊழல் வழக்குகள் - அக்டோபர் 1ம் தேதி விசாரணை

மியான்மரின் பெண் தலைவர் ஆங்சான் சூகி மீதான ஊழல் வழக்குகள் மியான்மர் ராணுவ நீதிமன்றத்தில் வரும் அக்டோபர் 1ம் தேதி விசாரணைக்கு வருகின்றன.
ஆங்சான் சூகி மீதான ஊழல் வழக்குகள் - அக்டோபர் 1ம் தேதி விசாரணை
x
மியான்மரின் பெண் தலைவர் ஆங்சான் சூகி மீதான ஊழல் வழக்குகள் மியான்மர் ராணுவ நீதிமன்றத்தில் வரும் அக்டோபர் 1ம் தேதி விசாரணைக்கு வருகின்றன. அந்நாட்டில் ராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து தற்போது வரை ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டால் 900க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் முறைகேடு நடத்தி தேர்தலில் வென்றதாக குற்றம்சாட்டிய ராணுவம், ஆட்சியை பிடித்த  ஜனநாயக தேசிய லீக் கட்சி தலைவரான ஆங்சான் சூகி உள்ளிட்ட பலரை வீட்டு காவலில் அடைத்தது.  அவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் பதியப்பட்டன. இவை தொடர்பான விசாரணை அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், ஆங் சான் சூகிக்கு 60 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

Next Story

மேலும் செய்திகள்