தலிபான்கள் கைப்பற்றலுக்குப் பிறகு மசூதியில் தொழுகை செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆப்கானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு மசூதிக்கு வந்து தொழுகை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்கள் கைப்பற்றலுக்குப் பிறகு மசூதியில் தொழுகை செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
x
ஆப்கானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு மசூதிக்கு வந்து தொழுகை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காபூலில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறிய பின்பு கடந்த வெள்ளிக்கிழமை நூற்றுக் கணக்கானோர் மதிய தொழுகையில் கலந்து கொண்டனர். இது குறித்து ஆப்கானியர்கள் தெரிவிக்கையில்,  முன்பெல்லாம் தொழுகை நடக்கையில், கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடந்ததால், அதிகபட்சம் 15 பேர் மட்டுமே மசூதிக்கு வருவார்கள் என்றும், தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் நாடு சென்றதில் இருந்து கொள்ளை சம்பவம் குறைந்ததால், மசூதியில் தொழுகை நடத்துவோரின் எண்ணிக்கை மெல்ல மெல்லெ அதிகரிப்பதாகவும் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்