தலிபான்களிடம் வீழ்ந்த பஞ்ச்ஷிர் மாகாணம்? - காபூல் நகரில் தலிபான்கள் கொண்டாட்டம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பி வரும் பஞ்ச்ஷிர் மாகாணம் தலிபான்களிடம் வீழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தலிபான்களிடம் வீழ்ந்த பஞ்ச்ஷிர் மாகாணம்? - காபூல் நகரில் தலிபான்கள் கொண்டாட்டம்
x
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பி வரும் பஞ்ச்ஷிர் மாகாணம் தலிபான்களிடம் வீழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் ஏறத்தாழ ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றினாலும், பஞ்ச்ஷிர் மாகாணம் அவர்களின் கட்டுப்பாட்டில் வராமல் தனித்து நின்றது. இந்நிலையில் ஆட்சியமைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள தலிபான்கள், பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் கைப்பற்றி விட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  காபூல் நகரில் கொண்டாட்ட உணர்வை வெளிப்படுத்தும் விதமாக வானை நோக்கி துப்பாக்கியால் சுடும் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்