ஆப்கானிஸ்தான் விவகாரம்; புதின் கருத்து - போப் ஆண்டவர் பேட்டியால் குழப்பம்

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதின் கூறியதை ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் கூறியதாக, போப் ஆண்டவர் தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தான் விவகாரம்; புதின் கருத்து - போப் ஆண்டவர் பேட்டியால் குழப்பம்
x
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதின் கூறியதை ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் கூறியதாக, போப் ஆண்டவர் தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து வானொலி ஒன்றிற்கு பேட்டியளித்த போது தவறான கருத்தை போப்பாண்டவர் பதிவு செய்தார். ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த மாதம் ஏஞ்சலா மெர்கெல் முன்னிலையில், "வரலாற்று, இன, மத பிரச்சினைகளை கருத்தில் கொள்ளாமல், பிற மக்களின் மரபுகளை முழுமையாக புறக்கணித்து விட்டு, மற்ற நாடுகளில் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப முயற்சி நடப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறினார். ஆனால், இந்தக் கருத்தை ஏஞ்சலா மெர்கெல் கூறியதாக போப்பாண்டவர் குறிப்பிட்டது குழப்பத்தை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்