ஆப்கனில் இருந்து வெளியேறியது அமெரிக்கா - ஆப்கானில் 20 ஆண்டு கால போர் நிறைவு

ஆப்கானிஸ்தானில் இருந்து நேற்று நள்ளிரவு அமெரிக்க படைகள் வெளியேறியது.
ஆப்கனில் இருந்து வெளியேறியது அமெரிக்கா - ஆப்கானில் 20 ஆண்டு கால போர் நிறைவு
x
ஆப்கானிஸ்தானில் இருந்து நேற்று நள்ளிரவு அமெரிக்க படைகள் வெளியேறியது. அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானால் தரையிறங்கியது. சுமார் 20 ஆண்டுகள் நடைபெற்ற போரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க வீர‌ர்கள் உயிரிழந்தனர்., இந்நிலையில்  ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க ராணுவம் வெளியேறும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். இதற்கிடையே, ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதால், அங்கு சிக்கிக்கொண்ட வெளிநாட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதற்காக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீர‌ர்கள் காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஜோ பைடன் அறிவித்த காலக்கெடு நிறைவடைந்த‌தை அடுத்து, காபூல் நேரப்படி நேற்று நள்ளிரவு 11.59 மணிக்கு அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது. காபூலில் இருந்து புறப்பட்ட கடைசி விமானத்தில், ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் மற்றும் ராணுவ வீர‌ர்கள் பயணித்த‌தாக அந்நாட்டின் ராணுவ தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய 20 ஆண்டு கால போர் நிறைவடைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்