கொரோனா தடுப்பு உபகரணங்கள்... கியூபாவிற்கு வழங்கிய ரஷ்யா

ரஷ்யா சார்பாக கியூபாவிற்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு உபகரணங்கள்... கியூபாவிற்கு வழங்கிய ரஷ்யா
x
கொரோனா தடுப்பு உபகரணங்கள்... கியூபாவிற்கு வழங்கிய ரஷ்யா
 
ரஷ்யா சார்பாக கியூபாவிற்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ரஷ்ய அரசு கியூபாவிற்கு, 10 லட்சம் முகக்கவசங்களுடன் கொரோனா தடுப்பு உபகரணங்களை அனுப்பியுள்ளதாக கியூப நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், சமீப காலமாக தொடர்ந்து கியூபாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், 2 இராணுவ விமானங்களில் 88 டன் எடையுள்ள உணவுப் பொருட்கள், கொரோனா தடுப்பு உபகரணங்கள், மற்றும் 10 லட்சம் முகக்கவசங்கள் ரஷ்யாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்