ஜி 7 நாடுகளின் தலைவர்களின் உருவங்கள்... எலக்ட்ரானிக் கழிவுகள் கொண்டு உருவாக்கம்

ஜி 7 நாடுகளின் தலைவர்களின் உருவங்களை எலக்ட்ரானிக் கழிவுகளைக் கொண்டு கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஜி 7 நாடுகளின் தலைவர்களின் உருவங்கள்... எலக்ட்ரானிக் கழிவுகள் கொண்டு உருவாக்கம்
x
ஜி 7 நாடுகளின் தலைவர்களின் உருவங்கள்... எலக்ட்ரானிக் கழிவுகள் கொண்டு உருவாக்கம்
 
ஜி 7 நாடுகளின் தலைவர்களின் உருவங்களை எலக்ட்ரானிக் கழிவுகளைக் கொண்டு கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர்.பிரிட்டனில் ஜி 7 மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்கவுள்ள தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இதை உருவாக்கிய அவர்கள், இதற்கு "மவுண்ட் ரிசைக்கிள்மோர்" என்று பெயரிட்டுள்ளனர். ஆண்டுதோறும் வெளியாகும் கணக்கிலடங்கா எலக்ட்ரானிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கவும், மிக வேகமாக நிலங்களை ஆக்கிரமித்து வரும் இந்தக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முயற்சியில் இறங்க வேண்டும் என்றும் ஜோ ரஷ்ஷும், அலெக்ஸ் ரெக்கேஜும் வலியுறுத்துகின்றனர். இதில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகா, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் மரியோ த்ராகி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரின் உருவ சிற்பங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்