மீன்பிடிப் படகுகளில் அதிகாரிகள் நியமனம் - அரசு அதிகாரிகள் மத்தியில் எதிர்ப்பு

லட்சத்தீவில் மீன்பிடிப் படகுகளில் உளவுப் பணிக்காக, அதிகாரிகளை நியமனம் செய்யும் சர்ச்சைக்குரிய முடிவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
மீன்பிடிப் படகுகளில் அதிகாரிகள் நியமனம் - அரசு அதிகாரிகள் மத்தியில் எதிர்ப்பு
x
மீன்பிடிப் படகுகளில் அதிகாரிகள் நியமனம் - அரசு அதிகாரிகள் மத்தியில் எதிர்ப்பு

லட்சத்தீவில் மீன்பிடிப் படகுகளில் உளவுப் பணிக்காக, அதிகாரிகளை நியமனம் செய்யும் சர்ச்சைக்குரிய முடிவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. லட்சத்தீவு நிர்வாகியாக பிரஃபுல் படேல் என்பவர் பொறுப்பேற்றதில் இருந்து, பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக, லட்சத்தீவில் உளவுத் தகவல்களை சேகரிக்க, உள்ளூர் மீன்பிடி படகுகளில் அரசு அலுவலர்களை உடன் அனுப்புவது குறித்து, மே 28ம் தேதி முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லட்சத்தீவு மக்கள்,  கடந்த 7ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தியதோடு, 12 மணிநேர உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்நிலையில், தீவின் அனைத்துப் பகுதிகளிலும் கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படையின் கண்காணிப்பால், பாதுகாப்பு வலுவாக இருப்பதாகவும், முன் அனுபவம் இல்லாத அதிகாரிகளை படகில் பணியமர்த்துவது மன அழுத்தம் ஏற்படுத்தும் எனவும் கூறி, இதனை திரும்பப் பெறுமாறு அரசு அதிகாரிகள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையேற்று, நிர்வாகம் தனது நிலைப்பாட்டை மாற்றி அமைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்