மீண்டும் அச்சுறுத்தும் பனிப்புயல் : மின்சார வயர்களில் படர்ந்த பனி... மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

அமெரிக்காவை மீண்டும் பனிப்புயல் தாக்கி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
மீண்டும் அச்சுறுத்தும் பனிப்புயல் : மின்சார வயர்களில் படர்ந்த பனி... மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்
x
அமெரிக்காவை மீண்டும் பனிப்புயல் தாக்கி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.அமெரிக்காவின் வட கிழக்கு மாகாணங்களை கடந்த வாரம் பனிப்புயல் தாக்கியது. இந்நிலையில், அங்குள்ள தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களை புதிய பனிப்புயல் தாக்கி வருகிறது. ஒக்லஹாமா, டெக்சாஸ், டென்னசே, விர்ஜீனியா உள்ளிட்ட மாகாணங்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றன. சாலைகள் முழுவதும் பனிக் கொட்டிக் கிடப்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், சில இடங்களில் விபத்துகளும் நிகழ்ந்தன. மின்சார வயர்களிலும், பனி படர்ந்ததால், டெக்சாஸ் மாகாணத்தின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்கள் அவதி அடைந்தனர். இதனிடையே, பனிப்புயலின் தாக்கம், அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்