பிரிட்டனில் வரலாறு காணாத பனிப்பொழிவு...10 ஆண்டுகளில் இல்லாத அளவு, குறைந்த வெப்பம்

பிரிட்டனில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை குறைந்துள்ள நிலையில், அதைப் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு....
பிரிட்டனில் வரலாறு காணாத பனிப்பொழிவு...10 ஆண்டுகளில் இல்லாத அளவு, குறைந்த வெப்பம்
x
பிரிட்டனில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை குறைந்துள்ள நிலையில், அதைப் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு....திரும்பிய இடமெல்லாம் பால் நுரை பொங்குவது போன்ற வெண்மை.... வெண் போர்வை போத்தியதுபோல், காட்சியளிக்கும் சாலைகள்... மழைபோல், மணி மணியாய் கொட்டிக் கொண்டிருக்கும் பனித்துகள்கள்... பனியின் பிடியில் உறைந்து நிற்கும் மரங்கள்......பிரிட்டனில் கடந்த நான்கு நாட்களாக நீடிக்கும் காட்சிகள் தான் இவை..... அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து, பிரிட்டனில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது....ஒருங்கிணைந்த பிரிட்டனாக கருதப்படும், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், தெற்கு அயர்லாந்து உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும், பனிப்பொழிவு பதம் பார்த்து வருகிறது.ஸ்காட்லாந்தில் உள்ள அல்ட்னாஹாரா பகுதியில், மைனஸ் பதினாறு புள்ளி 7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை சென்றுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில், பதிவான மிகக் குறைவான வெப்பநிலை ஆகும்....வரலாறு காணாத பனிப்பொழிவால், பிரிட்டன் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி உள்ளது. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்படைந்த நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, தற்காலிகமாக தடைபட்டு உள்ளது.இதேபோல், ரயில் மற்றும் விமான சேவைகளும் துண்டிக்கப்பட்டு உள்ளன. பனிப்பொழிவை கருத்தில் கொண்டு, லண்டன், எசக்ஸ், பக்ஸ்டன் உள்ளிட்ட பல நகரங்களில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.ஐரோப்பிய நாடுகளை டார்ஸி என்ற பனிப்புயல் கடந்து வருவதன் தாக்கத்தால்தான், பிரிட்டனில் கடுமையான பனிப்பொழிவு நீடித்து வருவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.இனி வரும் நாட்களில் பனிப்பொழிவு இன்னும் அதிகமாக இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில், பிரிட்டனின் பல்வேறு பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது வானிலை மையம்..இதனிடையே, பிரிட்டன் மக்கள் பனிப்பொழிவைப் பயன்படுத்தி, பூங்காக்களில் உற்சாகமாக விளையாடி வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது பேதமின்றி, பனியில் சறுக்கி விளையாடி மகிழ்கின்றனர்...சமீப காலமாக வரலாறு காணாத மழை.... வரலாறு காணாத வெள்ளம்.... வரலாறு காணாத வறட்சி.... போன்ற வார்த்தைகளுக்கு நாம் பழகிப்போய் இருந்தாலும், பருவநிலை மாற்றத்தின் மற்றுமொரு எச்சரிக்கை மணிதான் பிரிட்டனை மிரட்டும் பனி என்கின்றனர், பருவநிலை ஆராய்ச்சியாளர்கள்...


Next Story

மேலும் செய்திகள்