காற்றில் கொரோனா வைரஸ் அதிர்ச்சி தகவல் - ஐசிஎம்ஆர் குழு ஆய்வில் தகவல்

"கொரோனா வார்டு காற்றில் வைரஸ்..." ஐசிஎம்ஆர் குழு ஆய்வில் தகவல் நீண்ட நேரம் இருக்கிறது,தொற்று அதிகரிப்புக்கு காரணமாகிறது மருத்துவமனை பகுதிகளில் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தலாம்...ஐசிஎம்ஆர் குழு ஆய்வில் தகவல்
காற்றில் கொரோனா வைரஸ் அதிர்ச்சி தகவல் - ஐசிஎம்ஆர் குழு ஆய்வில் தகவல்
x
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் இருக்கும் பகுதியில், காற்றில் வைரஸ் நீண்ட நேரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காற்றில் கொரோனா வைரஸ் செயல்திறனுடன் இருப்பது தொடர்பாக மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழு, ஐதராபாத்தில் உள்ள செல்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் மற்றும் சிஎஸ்ஐஆர் எம்டெக் இணைந்து ஆய்வை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.அந்த ஆய்வு அறிக்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் இருக்கும் மருத்துவமனையில் காற்றில் கொரோனா வைரஸ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படாத மருத்துவமனைகளில் அவ்வாறு இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இது மருத்துவமனை பகுதிகளில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.கொரோனா வார்டுகளில் காற்றில் இருக்கும் வைரஸ்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா சிகிச்சை வார்டில் ஒரு நோயாளி நீண்ட நேரம் இருக்கும் பட்சத்தில் 2 மணி நேரங்களுக்கு அதிகமாகவும், 2 மீட்டருக்கு சுற்றிலும் கொரோனா வைரஸ் இருக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிகுறியில்லாத கொரோனா நோயாளிகள் இருக்கும் அறையில் அதிவேக காற்று இல்லாமல் இருந்தால் அவர்களிடம் இருந்து தொற்று பரவ வாய்ப்பு குறைவு எனவும் அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்