டி - 20 தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து - 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூ. அபார வெற்றி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து.
டி - 20 தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து - 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூ. அபார வெற்றி
x
இரண்டாவது இருபது ஓவர்கள் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் மூத்த வீர‌ர் ஹபீஸ் தனி ஆளாக போராடினார். இறுதி வரை ஆட்டமிழக்காத ஹபீஸ் 99 ரன்கள் விளாசியிருந்தார். இருந்த போதும் சக வீர‌ர்கள் ஈடு கொடுக்காத‌தால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்திருந்த‌து. நியூசிலாந்து வீர‌ர் டிம் சவுதி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  இதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 1 விக்கெட் மட்டுமே இழந்த நிலையில் இறுதி ஓவரில் இலக்கை கைப்பற்றியது. 


Next Story

மேலும் செய்திகள்