வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் : காந்தி சிலையை அவமதிப்பு செய்ததால் பரபரப்பு

அமெரிக்காவில் காந்தி சிலையை இந்திய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டக்காரர்கள் அவமதித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் : காந்தி சிலையை அவமதிப்பு செய்ததால் பரபரப்பு
x
டெல்லியில் மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அமைப்புகளும் போராடி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. அப்போது காந்தியின் சிலை மீது காலிஸ்தான் இயக்கத்தின் கொடியை போர்த்தி சிலர் அவமரியாதை செய்தனர். இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், உலகின் அமைதி மற்றும் நீதியின் சின்னமாக திகழ்பவரை போராட்டக்காரர்கள் அவமதித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்