புதிய வகை திமிங்கலம் கண்டுபிடிப்பு? - மெக்சிகோ ஆராய்ச்சியாளர்கள் தகவல்

புதிய வகை திமிங்கலத்தை கண்டுபிடித்து இருப்பதாக மெக்சிகோ கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
புதிய வகை திமிங்கலம் கண்டுபிடிப்பு? - மெக்சிகோ ஆராய்ச்சியாளர்கள் தகவல்
x
புதிய வகை திமிங்கலத்தை கண்டுபிடித்து இருப்பதாக மெக்சிகோ கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். சான் பெனிடோ தீவுப்பகுதியில் உள்ள கடலில் ஆய்வு மேற்கொண்டபோது, புதிய வகை திமிங்கலங்கள் தென்பட்டதாகவும், அவற்றின் பற்கள் வழக்கத்துக்கு மாறான இடத்தில் அமைந்து இருப்பதாகவும், ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் கடல் நீர் மற்றும் திமிங்கல செல்களின் டி என் ஏ பரிசோதனை முடிவுகளின்படியே, அதை உறுதி செய்ய முடியும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள வன உயிரின பூங்காவில் லாமாக்கள் எனப்படும் ஒட்டகம் போன்ற விலங்குகளும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டன. பூங்காவில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அலங்காரத்துக்காக வைக்கப்பட்ட மலர் வளையத்தை லாமாக்கள் உடனடியாக தின்று மகிழ்ந்தன. 

யூதர்களின் 'ஹனுக்கா' பண்டிகை : ஒளியில் ஜொலித்த புர்ஜ் கலிஃபா

ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையே சமீபத்தில் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஹனுக்கா பண்டிகை எனப்படும் ஒளித் திருவிழாவை துபாயில் வசிக்கும் யூதர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதற்காக புகழ்பெற்ற புர்ஜ் கலிபா டவர் முழுவதும் வண்ண விளக்குகளால், அலங்கரிக்கப்பட்டு, ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது. தொடர்ந்து ஆடல் பாடலுடன், யூதர்கள் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : கலிபோர்னியாவில் கால வரையறையின்றி பள்ளிகள் மூடல்

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கலிபோர்னியாவின் பல்வேறு பகுதிகளில், கால வரையறையின்றி பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. அங்கு ஊரடங்குக்கு பின்னர், சமீபத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தொற்று அதிகரிப்பால் பள்ளிகள் மூடப்படுகிறது. மேலும் இந்த நாட்களில் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட உள்ளது.
Next Story

மேலும் செய்திகள்