அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவிய டிரம்ப் : 2-வது பணியை தொடர்வார் என குறிப்பிடும் அதிகாரிகள்

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் ஆட்சி தொடரும் என்றே பணியாற்றுவதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவிய டிரம்ப் : 2-வது பணியை தொடர்வார் என குறிப்பிடும் அதிகாரிகள்
x
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் ஆட்சி அமைக்க தேவையான 270 வாக்குகளை காட்டிலும் அதிகமாக 306 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆனால், 232 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவிய டிரம்ப் அதனை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்துக் கொண்டு வழக்குகளை  தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் டிரம்ப் ஆட்சியே தொடரும் என்றே பணியாற்றி வருகிறோம் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோவ் பேசுகையில், டிரம்பின் இரண்டாம் ஆட்சி தொடரும் என்ற யூகத்திலே நாங்கள் பணியாற்றி வருகிறோம் எனக் கூறியுள்ளார். இதற்கிடையே ஜோ பைடனின் பதவி ஏற்பு விழாவில் டிரம்ப் கலந்துக் கொள்வாரா என்ற கேள்விக்கு வெள்ளை மாளிகையின் பத்திரிக்கை செயலாளர் மெக் எனானி பதில் அளிக்கையில், டிரம்ப் தன்னுடைய பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்வார் எனக் கூறியிருக்கிறார். ஜனவரி மாத பதவி ஏற்புக்கு இன்னும் பல படிநிலைகள் உள்ளது என்றும் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவி ஏற்பேன் என்று நம்புகிறார் என்றும் அவர் கூறியிருக்கிறார்

Next Story

மேலும் செய்திகள்