"டிரம்பின் அடுத்த நிர்வாகமும் சுமுகமாக அமையும்" - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சூசகம்

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சூசகமாக தெரிவித்து உள்ளார்.
டிரம்பின் அடுத்த நிர்வாகமும் சுமுகமாக அமையும் - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சூசகம்
x
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சூசகமாக தெரிவித்து உள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிரம்பின் அடுத்த நிர்வாக நடவடிக்கைகளும் சுமுகமாக அமையும் என்றும், தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் கட்டாயம் எண்ணப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் டிரம்ப் நிர்வாகத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெற்றிகரமாக செயல்பட்டதாகவும் மைக் பாம்பியோ கூறி உள்ளார்.

பைடன் ஆதரவாளர்கள் தொடர் கொண்டாட்டம் - சாலைகளில் நடனமாடி மகிழ்ச்சி

அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடனின் ஆதரவாளர்கள் தொடர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரபரப்பாக நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் இழுபறிக்கு பின் ஜோ பைடன் வெற்றி பெற்று  46-வது அதிபர் ஆனார். ஜோ பைடன் வெற்றி பெற்றதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய சாலைகளில் நடனமாடியும், இசை கருவிகளை வாசித்தும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.  

"டிரம்ப்  தோல்வியை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்" - ஜோ பைடன்

பிடனின் வெற்றியை ஏற்க மறுத்துள்ள ட்ரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாடி வருகிறார்,. இந்த நிலையில், டிரம்ப் தனது தோல்வியை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும் எனவும், பதவிகாலம் முடிந்ததும் டிரம்ப் வெளியேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் ஜோ பைடன்  தெரிவித்துள்ளார்,. நிர்வாகம் ஜோபிடனிடம் மாறுவதை தடுக்க டிரம்ப் தொடர்ந்து முயன்று வருவதாகவும், டிரம்ப் ஒத்துழைக் மறுத்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜோ பைடன் குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்,.  டிரம்ப் உண்மையிலேயே வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மறுத்தால், ஜனவரி 20 ஆம் தேதி ரகசிய சேவை பிரிவினர் அவரை வெளியே அழைத்துச் செல்வார்கள் என்று அமெரிக்க அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் டிக்டாக் செயலி தடை விவகாரம் - 90 நாட்கள் கால அவகாசம் விரைவில் நிறைவு

அமெரிக்க மக்களின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக சீன நிறுவனத்தின் டிக்டாக் செயலி செயல்படுவதாக அப்போதைய அதிபர் டிரம்ப் கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ம்தேதி தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் 90 நாட்கள் கால அவகாசம் வழங்கி அமெரிக்க நிறுவனத்திடம் செயலியை விற்க உத்தரவிட்டார். இதையடுத்து அமெரிக்க நீதிமன்றத்தில் சீன நிறுவனம் மனு தாக்கல் செய்த நிலையில் டிரம்ப்பின் தடைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை 12-ம் தேதியுடன் 90 நாள் கால அவகாசம் முடியும் நிலையில் மேலும் 30 நாட்கள் கால அவகாசம் கேட்டு சீன நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளது. அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடந்து அதிபராக பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள நிலையில் டிக் டாக் செயலி விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்