அமெரிக்க தேர்தல் - ஜார்ஜியாவில் ஜோ பைடன் முன்னிலை

அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாவதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், ஜார்ஜியா மாகாணத்தில் டிரம்பை பின்னுக்கு தள்ளி ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார்.
அமெரிக்க தேர்தல் - ஜார்ஜியாவில் ஜோ பைடன் முன்னிலை
x
பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா மாகாணங்களில் டிரம்ப்பும், நெவடா மாகாணத்தில் ஜோ பைடன் முன்னிலை வகித்து வந்தனர். இந்தநிலையில், ஜார்ஜியா மாகாணத்தில் தற்போது டிரம்ப்பை பின்னுக்கு தள்ளி 917 வாக்குகள் அதிகம் பெற்று ஜோ பைடன் முன்னிலை பெற்றுள்ளார். தற்போதைய நிலையில் நெவடா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களை ஜோ பைடன் கைப்பற்றினால் 22 வாக்குகள் கிடைக்கும். ஏற்கனவே 264 இடங்களை கைப்பற்றி உள்ள ஜோ பைடன், அதிபர் பதவியை கைப்பற்ற இன்னும் 6 
இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்