அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை : டிரம்ப், ஜோ பைடன் இடையே கடும் போட்டி

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி, 50.3 சதவீத வாக்குகளுடன் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 108 இடங்கள் கிடைத்துள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை : டிரம்ப், ஜோ பைடன் இடையே கடும் போட்டி
x
அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி, 50.3 சதவீத வாக்குகளுடன் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 108 இடங்கள் கிடைத்துள்ளன. ஜனநாயக கட்சி 48 புள்ளி 1 சதவீத வாக்குகள் பெற்று, 131 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 270 இடங்கள் வென்றால் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், இரு கட்சிகளுக்கிடையே போட்டி நீடித்து வருகிறது. 9 மணி நிலவரப்படி 4 கோடியே 18 லட்சம் வாக்குகளை குடியரசு கட்சியும், 3 கோடியே 98 லட்சம் வாக்குகளை ஜனநாயக கட்சியும் பெற்றுள்ளன. டிரம்பின் குடியரசு கட்சி 14 மாகாணங்களிலும், ஜோ பைடன் 13 மாகாணங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.  


Next Story

மேலும் செய்திகள்