"ஜோ பைடன் ஒரு ஊழல் அரசியல்வாதி" - அதிபர் டிரம்ப் காரசார பேச்சு

அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜோ பைடன், சீனாவிடம் பணம் வாங்கி அரசியல் செய்யும் ஊழல் அரசியல்வாதி என அதிபர் ட்ரம்ப கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜோ பைடன் ஒரு ஊழல் அரசியல்வாதி - அதிபர் டிரம்ப் காரசார  பேச்சு
x
நாளை அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அமெரிக்காவில் இறுதி கட்ட தேர்தல் பிரசாரம் அனல் பறக்க தொடங்கி உள்ளது. மிச்சிகன், லோவா, வட கரோலினா, ஜார்ஜியா, புளோரிடா உள்ளிட்ட பகுதிகளில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனை கடுமையாக விமர்சித்து உள்ளார். அமெரிக்கா மீண்டும் சிறப்பான நாடாக மாற தனக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்ட டிரம்ப், மிக்சிகன் மாகாணத்தை தொழில் நகரமாக மேலும் வலுப்படுத்த தன்னால் மட்டுமே முடியும் என்றார். கொட்டும் பனியிலும் அதிபர் டிரம்ப்புக்கு மிச்சிகன் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்