துருக்கியை மிரட்டிய நிலநடுக்கம் - பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட எர்டோகன்

துருக்கியின் ஏஜியன் கடற்பகுதியில் உள்ள இம்ஸிர் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பல்வேறு கட்டடங்கள் தரைமட்டமான நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்நாட்டு அதிபர் தயீப் எர்டோகன் பார்வையிட்டார்.
துருக்கியை மிரட்டிய நிலநடுக்கம் - பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட எர்டோகன்
x
துருக்கியின் ஏஜியன் கடற்பகுதியில் உள்ள இம்ஸிர் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பல்வேறு கட்டடங்கள் தரைமட்டமான நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்நாட்டு அதிபர் தயீப் எர்டோகன் பார்வையிட்டார். இம்ஸிர் மாகாணத்துக்கு சென்ற அவர், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளை பார்வையிட்டார். துருக்கி நிலநடுக்கத்தில் இதுவரை 37 பேர் பலியாகி உள்ள நிலையில், 800-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து உள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி அங்கு தொடர்ந்து நடந்து வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்