சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் பலி - போலீஸ் மீது துப்பாக்கியால் சுட்டதால் திருப்பி தாக்குதல்

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், போதைபொருள் கடத்தல் மன்னன் உயிரிழந்தார்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் பலி - போலீஸ் மீது துப்பாக்கியால் சுட்டதால் திருப்பி தாக்குதல்
x
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் மாகந்துர மதுஷை ஒன்றரை ஆண்டுக்கு முன் துபாயில் வைத்து இன்டர்போல் போலீசார் கைது செய்து இலங்கை போலீசிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மாளிகாவத்தை பகுதியில் போதை பொருள் மறைத்து வைத்துள்ளதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து அவரை அங்கு அழைத்து சென்ற போது, அந்த பகுதியில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட தொடங்கியுள்ளார். இதில் 2 போலீசார் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் திருப்பி சுட்டதில் மாகந்துர மதுஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கும் தமிழகத்தில் மரணமடைந்த அங்கொடா லொகாவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக இலங்கை போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.Next Story

மேலும் செய்திகள்