ஜோ பிடன் ஒரு குற்றவாளி - டிரம்ப் விமர்சனம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஒரு குற்றவாளி என அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
ஜோ பிடன் ஒரு குற்றவாளி - டிரம்ப் விமர்சனம்
x
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஒரு குற்றவாளி என அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். அரிசோனா மாகாணத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ஜோ பிடனின் குடும்பத்தினர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். ஜோ பிடன் மகனுக்கு சீனா நிதி அளிப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப் பேச்சுக்கு, ஜோ பிடன் பதிலடி

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி வாய்ப்பு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு சாதகமாக உள்ள நிலையில், அதன் போக்கை மாற்ற இயலாத நிலையில் அதிபர் டிரம்ப் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜோ பிடனை எப்.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.  ஜோ பிடன் மகனின் உக்ரைன் வணிகம் தொடர்பாக டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோ பிடனின் செய்தித் தொடர்பாளர் ஆண்​ட்ரூ பேட்ஸ், குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் தலைமையிலான செனட் கமிட்டிகள், ஜோ பிடன் எந்தவிதமான முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என ஏற்கனவே தெரிவித்துள்ளதை சுட்டிக் காட்டி உள்ளார். 

அவசர நிலைப் பிரகடனத்தையும் மீறி போராட்டம்

தாய்லாந்து நாட்டில், மன்னராட்சியில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தக் கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அரசின் அவசர நிலை பிரகடனத்தையும் மீறி, பாங்காக் நகரில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் செல்போன் வெளிச்சத்தைக் காட்டியும், தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.  

"ஜோ பிடனிடம் எப்.பி.ஐ. விசாரணை நடத்த  வேண்டும்" - அதிபர் டிரம்ப் பேச்சுக்கு, ஜோ பிடன் பதிலடி

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி வாய்ப்பு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு சாதகமாக உள்ள நிலையில், அதன் போக்கை மாற்ற இயலாத நிலையில் அதிபர் டிரம்ப் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜோ பிடனை எப்.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.  ஜோ பிடன் மகனின் உக்ரைன் வணிகம் தொடர்பாக ஆதாரம் எதுவும் அளிக்காமல் தொடர்ந்து டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜோ பிடனின் செய்தித் தொடர்பாளர் ஆண்​ட்ரூ பேட்ஸ், குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் தலைமையிலான செனட் கமிட்டிகள், ஜோ பிடன் எந்தவிதமான முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என ஏற்கனவே தெரிவித்துள்ளதை சுட்டிக் காட்டி உள்ளார். 

வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சி தலைவர் அறிவிப்பு - கினியாவில் கலவரம் - 3 பேர் பலி

கினியாவில் எதிர்க்கட்சித் தலைவர்  வெற்றி பெற்றதாக அறிவித்த நிலையில் தலைநகர் கோனக்ரியில் கொண்டாட்டம் மற்றும் மோதல் உருவானது. பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் 3 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் இன்னும் எண்ணப்படாத நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்  செல்லோ டேலின் டயல்லோவின் அறிவிப்பை, அந்நாட்டு தேர்தல் ஆணையம் நிராகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 




Next Story

மேலும் செய்திகள்