"கம்யூ. உறுப்பினர்களுக்கு அமெரிக்காவில் குடியேற தடை" - புதிய கொள்கை அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா

பிற நாடுகளை சார்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
x
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு புதிய கொள்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகின் எந்த நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும், அமெரிக்காவில் குடியேற அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமின்றி, உலகின் எந்த நாடுகளிலும் உள்ள, சர்வாதிகார கட்சியில் உறுப்பினராக இருப்பவர்களும், அமெரிக்காவில் குடியேற தடை விதிக்கப்படுவதாகவும் புதிய கொள்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமெரிக்காவில் தற்போது தற்காலிகமாக வசித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களுக்கு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.  சீனாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே, அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்