கொரோனா பரவலுக்கு காரணம் சீனா - டிரம்ப்

பிரதமர் நரேந்திர மோடி தமது நல்ல நண்பர் என்றும், சிறப்பான பணியை அவர் செய்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலுக்கு காரணம் சீனா - டிரம்ப்
x
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து தங்களுக்கு மிகப் பெரிய ஆதரவு உள்ளதாகவும், அமெரிக்காவில் வாழும் இந்திய மக்கள் தமக்கு வாக்களிப்பார்கள் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா பரவலுக்கு முன்பு, தான் இந்தியா செ​ன்றதை சுட்டிக்காட்டிய டிரம்ப், இந்தியர்கள் கணிக்கமுடியாதவர்கள் என்றும், இந்தியாவுக்கு நல்ல தலைவர் கிடைத்து உள்ளதாகவும், அவர் மிகவும் நல்லவர் என பிரதமர் மோடியை புகழ்ந்துள்ளார். இந்தியா, சீனா இடையிலான தற்போதைய நிலை மிகவும் மோசமான சூழ்நிலை என்றும், இந்த நேரத்தில் இரண்டு நாடுகளுக்கும் உதவ அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் டிரம்ப் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இருநாடுகளுடனும் பேசி வருவதாக தெரிவித்த டிரம்ப், அமெரிக்காவால் இந்த பிரச்சனைக்கு தீர்வுக் காண என்ன செய்ய முடியுமோ, அதனை முழு மனதுடன் செய்யும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவால் இந்தியாவை எதுவும் செய்ய முடியாது என்று தாம் நம்புவதாக தெரிவித்துள்ள டிரம்ப், ரஷ்யா விட தற்போது சீனா பற்றி அதிகம் பேச காரணம், அந்த நாடு 188 நாடுகளுக்கு செய்த செயல் தான் என மறைமுகமாக சீனாவை சாடியுள்ளார் டிரம்ப்.

Next Story

மேலும் செய்திகள்