வெள்ளை மாளிகை வளாகத்தில் பிரமாண்ட விழா - அதிபர் வேட்பாளர் தேர்வை ஏற்றுக் கொண்டார், டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தை, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் டொனால்ட் டிரம்ப் தொடங்கி வைத்தார்.
வெள்ளை மாளிகை வளாகத்தில் பிரமாண்ட விழா -  அதிபர் வேட்பாளர் தேர்வை ஏற்றுக் கொண்டார், டிரம்ப்
x
நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் ஒட்டுமொத்த உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் வேட்பாளராக டிரம்ப் மீண்டும் தேர்வாகியுள்ளார். அதிபர் வேட்பாளர் தேர்வை டிரம்ப் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. மனைவி மெலனியாவுடன் கலந்து கொண்ட அதிபர் டிரம்ப், குடியரசு கட்சியின் பிரசாரத்தையும் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்