கொரோனா அச்சத்தால் மூடப்பட்ட மிதக்கும் பூங்கா - சுற்றுலா பயணிகள் பார்வைக்கு மீண்டும் திறப்பு

மெக்சிகோ நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த மிதக்கும் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டது.
கொரோனா அச்சத்தால் மூடப்பட்ட மிதக்கும் பூங்கா - சுற்றுலா பயணிகள் பார்வைக்கு மீண்டும் திறப்பு
x
மெக்சிகோ நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த மிதக்கும் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டது. கைகளை சுத்தம் செய்து, முக்கவசம் அணிந்த பின்பே அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். படகுகளில் பயணித்தப்படி மெக்சிகோவின் வெனிஸ் என்று அழைக்கப்படும் அந்த மிதக்கும் பூங்காவை சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் சுற்றி பார்த்தனர். 

"உக்ரைன் பயணிகள் விமானத்தை ஈரானின் இரண்டு ஏவுகணைகள் தான் தாக்கியது" - ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 

உக்ரைன் பயணிகள் விமானத்தை ஈரானின் இரண்டு ஏவுகணைகள் தான் தாக்கியது என்று ஈரான் அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம், தலைநகர் டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில், 176 பயணிகள் உயிரிழந்தனர். இந்த நிலையில், ஈரான் ஏவுகணை தாக்கி இந்த விபத்து நடந்திருப்பதாக, உலக நாட்டுத்தலைவர்கள் குற்றம்சாட்டினர். இதை ஈரான் எதிர்த்து வந்தது. இந்த நிலையில் தாங்கள் நாட்டு இரு ஏவுகணைகள் தான், 25 வினாடிகளில் அடுத்தடுத்து, உக்ரைன்  விமானத்தை தாக்கியதாக ஈரான் கூறியுள்ளது. இந்த விபத்து நடந்த பின்னர் சில மணி நேரம் பயணிகள் உயிருடன் இருந்ததாகவும் தற்போது கூறியுள்ளது, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜெர்மனியில் அதிகரிக்கும் வெப்பம் - மரங்களை காக்க களம் இறங்கிய மக்கள்

ஜெர்மனியில் கடும் வறட்சி நிலவுகிறது. தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளது. தலைநகர் பெர்லினில் மட்டும் 6 லட்சத்து 25 ஆயிரம் மரங்கள் வறட்சியால் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் வேதனையடைந்த பெர்லின் வாசிகள் மரங்களை காக்கும் பணியில் இறங்கியுள்ளனர். பெரிய கேன்களில் தண்ணீர் பிடித்து சென்று மரங்களுக்கு ஊற்றுவதை தொடர்ந்து
செய்து வருகின்றனர். 

51 இஸ்லாமியர்களை சுட்டுக்கொன்ற இனவெறியன் - உச்ச பாதுகாப்புடன் நியூசிலாந்து நீதிமன்றத்தில் ஆஜர்

51 இஸ்லாமியர்களை சுட்டுக்கொன்ற இனவெறியன் நியூசிலாந்து நீதிமன்றத்தில் தண்டனை அறிவிப்புக்காக ஆஜர்படுத்தப்பட்டுள்ளான். கடந்த ஆண்டு மார்ச் மாதம் நியூசிலாந்தில் கிறிஸ்ட் சர்ச்சில் உள்ள 2 மசூதிக்குள் புகுந்த பிரிண்டான் டெரண்ட் என்ற இனவெறியன் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில், 51 இஸ்லாமியர்கள் உயிரிழந்தனர். தற்போது விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் தண்டனை அறிவிப்புக்காக தனி விமானம் மூலம் கிறிஸ்ட் சர்ச் அழைத்து வரப்பட்டுள்ளான். தண்டனையை அறிவிக்கும் முன் அவனது கருத்தை தெரிவிக்க அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்