இங்கிலாந்தில் ரூ.2.5 கோடிக்கு ஏலம் போன காந்தியின் கண்ணாடி

இங்கிலாந்தில் காந்தியடிகளின் மூக்குக்கண்ணாடி சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் ரூ.2.5 கோடிக்கு ஏலம் போன காந்தியின் கண்ணாடி
x
இங்கிலாந்தில் காந்தியடிகளின் மூக்குக்கண்ணாடி சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் காந்தி வசித்த போது   நண்பரிடம் கண்ணாடியை கொடுத்ததாகவும், அவரிடமிருந்து வாரிசான தனக்கு அந்த கண்ணாடி கிடைத்ததாகவும் அதனை ஏலத்தில் விட்ட நபர் கூறியுள்ளார். தங்க முலாம் பூசப்பட்ட அந்த மூக்குக்கண்ணாடி காந்தியுடையது தான் என உறுதி செய்யப்பட்டதையடுத்து இங்கிலாந்தில் ஏலம் நடைபெற்றது. இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்ட நிலையில் இறுதியாக இந்திய மதிப்பில் இரண்டரை கோடி ரூபாய்க்கு மூக்குக்கண்ணாடி ஏலம் விடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்