ஜெர்மனில் கொரோனா வைரஸை கண்டறிய நாய்களுக்கு பயிற்சி - ஜெர்மன் ராணுவம் புதிய திட்டம்

ஜெர்மனில் கொரோனா வைரஸை கண்டறிய நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஜெர்மனில் கொரோனா வைரஸை கண்டறிய நாய்களுக்கு பயிற்சி - ஜெர்மன் ராணுவம் புதிய திட்டம்
x
ஜெர்மனில் கொரோனா வைரஸை கண்டறிய நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை அடையாளம் காணும் வகையில், ராணுவ நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு  திட்டத்தை ஜெர்மன் ராணுவம் முன்னெடுத்துள்ளதாக, அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அன்னெக்ரெட் கிராம்ப் கரன்பவுர் தெரிவித்துள்ளார். ஹனோவர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் ராணுவமும் இணைந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில்,  அந்த வேலைகள் முடிய இன்னும் பல மாதங்கள் என அமைச்சர் கூறினார். வைரஸால், உடல் திரவங்களில், உயிர் வேதியியல் மாற்றங்களை வெளியேற்ற முடியும். அப்படி வெளியேற்றும் போது, பயிற்சியளிக்கப்பட்ட நாய்களால் அது கொரோனா தொற்றா என கண்டறிய முடியும் என அவர் விளக்கம் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்