சீனாவில் பெய்து வரும் கனமழை - தெரு வீதிகளில் ஆறு போல் ஓடிய மழை நீர்

உலகளவில் நடைபெற்ற செய்திகளின் தொகுப்புகள்
சீனாவில் பெய்து வரும் கனமழை - தெரு வீதிகளில் ஆறு போல் ஓடிய மழை நீர்
x
சீனாவில் பெய்து வரும் கனமழையால், தெருக்கள் மற்றும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. பல தெரு விதிகளில் ஆறு போல் மழை நீர் ஓடியதால், பாதிக்கப்பட்டவர்களை மீட்பு படையினர், படகு மூலம் மீட்டனர். கனமழையால் அங்குள்ள கிழக்கு மாகாணங்களான ஜியாங்சு மற்றும் ஜியாங்சி மிகுந்த பாதிப்புள்ளாகியுள்ளனர். ஜியாங்சியி பகுதியில் உள்ள மிகப் பெரிய நன்னீர் ஏரியான போயாங் ஏரியின் நீர்மட்டம் 22.52 மீட்டருக்கு மேல் உயர்த்துள்ளதால், பாதுகாப்பு கருதி, அதன் உயரத்தை, மணல் மூட்டைகள் வைத்து, சீன பாதுகாப்பு படையினர் உயர்த்தி வருகின்றனர். இதனிடையே அங்கு மழை தொடரும் என்றும்,  மீண்டும்  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

"முக கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டியதில்லை"  - இங்கிலாந்து அமைச்சர், மைக்கேல் கோவ் கருத்து

கடைகளில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டியதில்லை என்று இங்கிலாந்து அமைச்சர், மைக்கேல் கோவ் தெரிவித்துள்ளார். 

லண்டனில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர்,  நல்ல சுகாதாரமான காற்றை மக்கள் சுவாசிக்க வேண்டும் என்பது தனது கருத்து என கூறினார். முக கவசம் அணிவதன் மூலம் நல்ல காற்றை சுவாசிக்க முடியாது என கூறினார். கொரோனாவை தடுக்க பிரிட்டன் அரசு சிறந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மைக்கேல் கோவ் கூறினார்

"ஹாகியா சோபியா அருங்காட்சியகம் மசூதியாக மாற்றம்" - போப் பிரான்சிஸ் கண்டனம்

துருக்கி இஸ்தான்புலில் உள்ள ஹாகியா சோபியா அருங்காட்சியகம், முதன் 
முறையாக மசூதியாக மாற்றப்பட்டுள்ளது. 

நீதிமன்ற தீர்ப்பை, அடிப்படையாகக் கொண்டு, ஹாகியா சோபியாவை மீண்டும் மசூதியாக மாற்றப்பட்டுள்ளதாக, துருக்கி அதிபர், தயிப் எர்டோகன் தெரிவித்தார். 86 ஆண்டுகளுக்கு பின், மெஹ்மத்தின் புனிதமான இடம் மீண்டும் மசூதியாக செயல்பட உள்ளதாக கூறினார். இதனிடையே, இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா அருங்காட்சியகத்தை மசூதியாக மாற்ற முடிவு செய்ததற்கு, போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

2 வயது குழந்தை கூடைப்பந்து விளையாடும் காட்சி - இணையதளத்தில் 4 லட்சம் பார்வையாளர்களை கடந்தது

சீனாவில் 2 வயது குழந்தை கூடைப்பந்து விளையாடும் காட்சியை, இணையதளம் வழியாக 4 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். 

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணமான லுஜோ நகரைச்சேர்ந்த, இரண்டு வயது சிறுவன், லி மொடெங்சியன் தான், இந்த சாதனைக்கு சொந்தக்காரன். தனது தந்தை நடந்து செல்லும் போதும், தங்களது காரிலும் அமைக்கப்பட்டுள்ள பேஸ்கட்டில், அந்த குழந்தை விளையாடும் காட்சி, அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

சரக்கு கப்பலில் பயங்கர தீவிபத்து - சாண்டியாகோ துறைமுகத்தில் பரபரப்பு

அமெரிக்காவில் சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்த விபத்தில், மாலுமிகள் காயம் அடைந்துள்ளனர். துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்த கப்பல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. 

இதனால், பெருமளவில் கரும்புகை வெளியேறியது. அங்கு நின்ற மற்ற கப்பல் மற்றும் துறைமுகத்துக்குள் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. கப்பல் மீதும் தண்ணீர் தெளித்து தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.

பார்முலா ஒன் கார் பந்தயம் - ஹாமில்டன் சாம்பியன்

ஆஸ்திரியாவில் உள்ள ஸ்பீல்பெர்க்கில் நடைபெற்ற பார்முலா-ஒன் கார் பந்தயத்தில் நடப்பு உலக சாம்பியன், லூயிஸ் ஹாமில்டன், சாம்பியன் பட்டத்தை வென்றார்.  

பந்தய தூரத்தை ஒரு மணி நேரம் 22 நிமிடங்களில் கடந்து, 'மெர்சிடஸ்' அணியின் பிரிட்டன் வீரர் லூயிஸ் ஹாமில்டன் முதலிடத்தில் வெற்றி பெற்றார். 


Next Story

மேலும் செய்திகள்