சிங்கப்பூர் நாடாளுமன்ற தேர்தல் - ஆளுங்கட்சி வெற்றி

சிங்கப்பூரில் கொரோனா அச்சுறுத்தலை மீறி நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில், ஆளுங்கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது.
சிங்கப்பூர் நாடாளுமன்ற தேர்தல் - ஆளுங்கட்சி வெற்றி
x
சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையிலான பீப்பிள் ஆக்சன் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஆட்சி காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில்,  பிரதமர் லீ முன்னதாகவே தேர்தலை அறிவித்தார். இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலை மீறி சிங்கப்பூரில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. முககவசம், கையுறைகள் அணிந்தபடியும், தனி மனித இடைவெளியை பின்பற்றியும், மக்கள் பாதுகாப்பாக வாக்களித்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், ஆளும் 'பீப்பிள் ஆக்சன்' கட்சி, மொத்தமுள்ள 93 இடங்களில், 83 இடங்களை பிடித்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. எனினும், 1959 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் அக்கட்சியன் வாக்கு சதவீதம், முந்தைய தேர்தலை விட 8.7 சதவீதம் சரிந்துள்ளது.

அதிபருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - போலீசார் மீது போராட்டக்காரர்கள் பயங்கர தாக்குதல்


செர்பிய தலைநகர் பெல்கிரேட்டில், அதிபருக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட அரசின் செயல்பாடுகளை விமர்சித்து கடந்த சில நாட்களாக, அந்நாட்டில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்ற கட்டடத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்ற போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. 


Next Story

மேலும் செய்திகள்